Sunday, August 7, 2011

ஆரோக்கியம் - நம்பிக்கைகளும் நிஜங்களும்


ஆரோக்கியம்
12 நம்பிக்கைகளும் நிஜங்களும்
Myths and Facts about Health
அன்றாடம் ஏதேனும் ஒரு வகையிலோ, யார் மூலமாகவோ ஆரோக்கியத்தை பற்றிய புதிய புதிய செய்திகளை அறிந்துக்கொள்கிறோம். சில சமயம் பாட்டி அல்லது நம் அம்மா மூலமாகவும் சத்துணவு ஆலோசனைகள் பெறுகிறோம். இவற்றில் எது நிஜம் எது வெறும் கதை என்று அறிந்துக்கொள்வோமா ?

நம்பிக்கை #1 : கொழுப்பே இல்லாத உணவு தான் மிகவும் சிறந்தது.

நிஜம் : தவறு, சிறிதளவு கொழுப்பு சத்து நமக்கு மிகவும் அவசியம் ஆகும்.

நம்பிக்கை #2 : கொழுப்பு அடங்கியுள்ள உணவுகள்  தான் நம் முதல் எதிரி

நிஜம் : இல்லை, பதப்படுத்தபட்டுள்ள கொழுப்பு உணவும் இரத்த கொழுப்பு ஏற்படுத்தும் என்பதே உண்மை.நம்பிக்கை #3 : எண்ணையை குறைத்துக்கொண்டால் மிகவும் நல்லது

நிஜம் : தவறு, எண்ணையை குறைத்துக்கொள்வதோடு, சமச்சீரான உணவு முறையும் அத்தியாவசியம் ஆகும்.

நம்பிக்கை #4 : அதீதமான தாவர எண்ணை மிகவும் நல்லது.

நிஜம் : இல்லை, தாவர எண்ணையின் உபயோகமும் சற்று மட்டுப்படுத்தல் அவசியம் ஆகும்.

நம்பிக்கை #5 : குசம்பப்பூ அல்லது சூரியகாந்திப்பூ எண்ணை எவ்வளவு உட்க்கொண்டாலும் தவறில்லை.

நிஜம் :  தவறு,  இவற்றின் அதிகமான உபயோகம் "நல்ல" கொழுப்பினை குறைத்துவிடும்.

நம்பிக்கை #6 : தாவர எண்ணை இரத்த கொழுப்பை அதிகமாக்காது.

நிஜம் : ஆம், ஆயினும் அதிக அளவு எண்ணை சேர்த்துக்கொள்வதால், அதிக கொழுப்பு உண்டாகிறது. அதிக கொழுப்பு அதிக இரத்த கொழுப்பில் போய் முடிகிறது.நம்பிக்கை #7 : பட்டினி மற்றும் விரைவில் எடை இழத்தல் என்பது நல்லது.

நிஜம் : அறவே தவறு, உடல் எடை சிறிது சிறுதாக குறைந்தால் தான் நல்லது, பட்டினி இதற்கு தீர்வல்ல.

நம்பிக்கை #8 : நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் உணவு அருந்துவது தான் எடை குறைக்க சிறந்த வழி

நிஜம் : தவறு, சிறிய இடைவெளிகளில் பலமுறை உட்கொள்ளும் உணவு முறையே சிறந்த முறையாகும்.நம்பிக்கை #9 : மது அருந்துவது இதயத்திற்கு மிகவும் நல்லது.

நிஜம் : இல்லை, மது "நல்ல" கொழுப்பை அதிகரிக்க உதவாது.

நம்பிக்கை #10 : சர்க்கரை மட்டுமே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

நிஜம் : இல்லை, எல்லா மாவுச்சத்து ( கார்போ-ஹைட்ரேட்ஸ்) அடங்கிய உணவுகளும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். குறிப்பாக, சர்க்கரை இரத்தத்தின் "குளுகோஸ்" அளவை மிக வேகமாக கூட்டக்கூடியது.நம்பிக்கை #11 : குண்டானவர்கள் மட்டுமே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டும்

நிஜம் : சாதாரண எடை உள்ளவர்களுக்கும் இரத்த கொழுப்பு அதிக அளவு இருக்க வாய்ப்பு உள்ளது.

நம்பிக்கை #12 : வீரியமான உடற்பயிற்சி தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நிஜம் : இல்லை, ஒரு நீண்ட வேகமான நடைபயிற்சியும் நல்ல பலன் கொடுக்க வல்லது.கர்ப்பம் மற்றும் மகப்பேற்றை பற்றிய நிஜங்கள் :

நம்பிக்கை : கர்ப்பகாலத்தில் செய்யும் நடைப்பயிற்சி பேறு வலியை கொடுக்கும்.

நிஜம் : உண்மை தான்.
நடக்கும் பொழுது புவியீர்ப்பு விசையினால் குழந்தை கீழ் நோக்கி நகர்கிறது. பிரசவ வலி எடுக்கும் பொழுது படுத்துக்கொண்டிருந்தால், கர்ப்ப பையில் அழுத்தம் ஏற்படும். இதனால் குழந்தைக்கு கிடைக்கும் இரத்தம் மற்றும் ப்ராண வாயுவிற்கு தடை உண்டாகிறது. மேலும் வலியும் மிக அதிகம் உண்டாகிறது.

மாயை : பிரசவ வலி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

நிஜம் : தவறு
வலி மிகவும் அதிகம் ஆகும் பட்சத்தில் , இயற்கையே பெண்ணை மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. சாதகமான மனப்பான்மையால், பிரசவ வலியை எளிதாக எதிர்கொள்ளலாம்.நம்பிக்கை : கர்ப்பமான பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.

நிஜம் : உண்மை.
பெண் மகிழ்ச்சியாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தையும் ஆரோக்கியமாக மற்றும் மகிழ்ச்சியாக வளரும். அமைதியான மன நிலையில் கர்ப்பிணிப்பெண் இருந்தால் மிகவும் நல்லது.

மாயை : பிரசவத்தின் பொழுது பெண், சிசுவை உந்தி தள்ள வேண்டும்.

நிஜம் : தவறு.
மருத்துவர் அல்லது தாதிகள் அறிவுறையின் பேரில் மட்டுமே சிசுவை தாய் பிரசவத்தின் பொழுது உந்தி தள்ள வேண்டும்.6 comments:

வணக்கம் சகோதரி,
வித்தியாசமான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க. மனிதன் தன் மன உணர்வில் எழும் நம்பிக்கை வாயிலாகத் தான் ஒரு சில உணவுகளை- அவை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதனைத் தெரிந்தே உண்ணுகிறான் எனும் உண்மையினை விளக்கி, அதன் பின்னரான பின் விளைவுகள் எவ்வளவுன் தூரம் நிஜமானவை என்பதனை உங்களின் இந்த ஆரோக்கியப் பதிவு தாங்கி வந்திருக்கிறது.

http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
இவ் இணைப்பில் சென்று, இண்ட்லி, தமிழ்10ஓட்டுப் பட்டைகளை உங்கள் வலையில் இணைக்கலாமல்லவா.

என்னுடைய நம்பிக்கைகள் சில நிஜங்கலாயிருக்கிறது..

நிரூபன், உண்மை தான் சகோ. உணவே மருந்து என்ற காலம் போய், தற்பொழுது,உண்ணும் உணவால் மருந்து தேவைப்படும் அளவுக்கு மாறிவிட்டோம்.உங்கள் பாராட்டிற்கு யாழ் இனிதின் மனமார்ந்த நன்றி.

நிரூபன் சகோ, தாங்கள் பரிந்துரைத்த தளத்தில் பதிக்க ஒரு முறை முயற்சி செய்தோம். ஆனால் பதிக்க முடியவில்லை, மீண்டும் முயல்கிறோம். உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

கருன் சகோ, உங்களை போல என்னுடைய பல நம்பிக்கைகளும் இதன் மூலம் தெளிவு பெற்றன. ஆகையால் இங்கு பகிர்ந்து கொண்டோம். ஆதரவிற்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More