Friday, July 29, 2011

மழலை


மழலை




வளர்ந்த பெரியோர்கள் உச்சரிக்கும் அன்பிலா.......
வாக்கினை விடவும்,
எத்தனை அர்த்தம் சின்னஞ்சிறு மழலை
பேசும் உளறல்களில் !

போதை கொண்டு தள்ளாடும் வாலிபர்களின்.....
கால்களை விடவும்,
பதியாமல் நடைப்பழகும் பச்சிளங்குழந்தையின்
கால்களில் எத்தனை உறுதி !

மனதிற்குள் கபடம் வைத்து பார்வையில்.....
பகட்டு பாசத்தை பரிமாறும்
புனிதர்களை விடவும்,
வாய் பேச பழகாத காலத்திலும்
பளிச்சென வீசும் பார்வைகளிலே
எத்தனை வெளிச்சம் !

வித விதமான ஆடைகளில் தங்கள்......
உள் அழுக்கை மறைக்கும்
மனிதர்களை விடவும்,
ஆடையே அணியாத அப்பாவி பிஞ்சுகளின்
அம்மணத்தில் தான்
எத்தனை தூய்மை !

வெளி தோற்றத்தினை கொண்டு......
ஆட்களை எடைபோடும்
அதிமேதாவிகளை விடவும்,
வேற்றுமுகம் பார்க்க தெரியாத
வெள்ளை மனதுகளில்
எத்தனை தெளிவு !

எளிதான உறவுகளை சிக்கலாக்கி .....
எதற்கும் உதவாத வைராக்கியம் கொள்ளும்
ஏளன பிறவிகளை விடவும்,
எதற்கெடுத்தாலும் மோகனமாய் புன்னகைக்கும்
வெகுளித்தனத்தில் த்தனை ஓளி !

மனிதன் வளர்ந்தபின் இத்தனையும் இழப்பான்....
என்று தெரிந்திருந்தால், ஒரு வேளை
கடவுளும் சிந்தித்திருப்பானோ ?

மழலை உலகின் மகிழ்ச்சி யாவும்......
இவ்விதம் தொலைத்து விடுவோம்
என்று அறிந்திருந்தால்,
ஒரு வேளை மனிதனும் சிந்தித்திருப்பானோ ?

இப்போதும் தாமதமில்லை
இனி வாழ்வில் பேதமுமில்லை......

மேனியை மனிதனாக.....
மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!







8 comments:

If we are all child there is no problems,,,, siva

வணக்கம் சகோ,
மழலையின் உணர்வுகளைத் தாங்கி வந்த கவிதை, இறுதி வரிகளில்,
//இப்போதும் தாமதமில்லை
இனி வாழ்வில் பேதமுமில்லை......
மேனியை மனிதனாக.....
மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!//

எனும் தத்துவத்தை, தத்ரூபமாக விளக்கி நிற்கிறது.

அருமையான வரிகள் குறிப்பாக
மனிதன் வளர்ந்தபின் இத்தனையும் இழப்பான்....
என்று தெரிந்திருந்தால், ஒரு வேளை
கடவுளும் சிந்தித்திருப்பானோ ?

மழலை உலகின் மகிழ்ச்சி யாவும்......
இவ்விதம் தொலைத்து விடுவோம்
என்று அறிந்திருந்தால்,
ஒரு வேளை மனிதனும் சிந்தித்திருப்பானோ ?

குழந்தையாகவே இருதிருந்தால் எவ்வ்லாவு நன்றாக இருந்திருக்கும்

\\\இப்போதும் தாமதமில்லை
இனி வாழ்வில் பேதமுமில்லை......
மேனியை மனிதனாக.....
மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!\\\
இதை அனைவரும் உணர்ந்தால் உலகில் துன்பமில்லை

சிவா, உண்மை தான் சிவா ! நன்றி.

நிரூபன், தத்துவங்கள் எல்லாம் கற்றுக் கொள்ளவே கூறப் பட்டிருக்கின்றன. கற்றுக் கொள்வோம் ! முன்னேறுவோம் !!

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

Farhan, நாம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் நமக்குள் எஞ்சி இருக்கும் குழந்தைத்தனம் தான் நம்மை மனிதன் ஆக்கி வைத்து இருக்கிறது.

இதை கண்டு கொண்டு பாராட்டிய உங்களுக்கு நன்றி !

இதழ் குவித்து மழலை பேசும் உனக்கு
மழலைமொட்டு பிள்ளைகளின் மனதைத்தொட்டு மகிழ்வோடு மணம்பரப்பும் மலர்களாகும்
குழலினிது யாழினிது ஆனால் மிகஇனிது
....நீ பராமரிக்கும் வலை இனிது ... என்றும் அன்புடன் வீகே tamilldhesamchat.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More