Thursday, June 2, 2011

பணிப்பெண்களை தேர்ந்து எடுப்பது எப்படி ?


  
வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தும்முன் கவனிக்கப்படவேண்டியவை :

இன்றைய வாழ்க்கை முறையில் இல்லத்தை பேண பணிப்பெண்களை அமர்த்துவது என்பது உங்கள் உபரி நேரத்தை குடும்பத்துடனோ, வேறு பயனுள்ள  பணிகளுக்காகவோ உங்களை ஈடுபடுத்திகொள்ள வழிவகுக்கும். இன்றைய பெற்றோர் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை மிகவும் வேகமாகவும், நேரமின்மையாலும் நிறைந்திருக்கிறது. இதில் பணிப்பெண்களின்  பங்கு மிகவும் இன்றியமையாததாலும், மக்களின் தேவைகள் பெருகியதாலும் பெரிய நகரங்களில் , இவ்வாறு நபர்களை பணிக்கமர்த்தும் ஏஜென்சிகள் மிகவும் பெருகிவிட்டன.பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கையில் , இதே துறையில் வல்லுநர்களாக விளங்கும் ஏஜென்சிகள் மூலமாக முயற்சி மேற்கொள்வது உத்தமம். இந்த முறையில் நன்கு தொழில்ரீதியான பயிற்சி பெற்ற மற்றும் உத்திரவாதமான சூழலுடன் அமைந்த நபர்கள் அமைவார்கள். இல்லப்பராமரிப்பில் சிறந்து விளங்கும் இது போன்ற ஏஜென்சிகள், படுக்கை அமைப்பு, கழிவறை பராமரிப்பு எனும் நுணுக்கமான பணிகளையும் பாங்குடனே செய்யும் நபர்களை நமக்கு அளிப்பார்கள்.

பணிக்கு அமர்த்தும் முன்பு உங்கள் தேவைக்கு ஏற்றபடி அமைய, உங்களை அணுகும் நபர்களிடம் நேர்முக தேர்வு நடத்துவது மிகவும் அவசியமானது.

பணிப்பெண்களை அமர்த்த உதவும் சில ஆலோசனைகள் :

வியாபாரநோக்கோடு நடத்தபடும் ஏஜென்சிகள் 100 கனக்கில் உள்ளபடியால், ஏமாறாமல் சரியான சேவைகள் எவ்வாறு பெறுவது ? இவ்வாறு பெறும் சேவைகள் பாதுக்காப்பானதாகவும், நம்பிக்கைகுறியதாகவும் உள்ளதா என்று எவ்வாறு அறிந்துகொள்வது ? உங்கள் இல்லத்திற்கு , உகந்த நபர்களை தேர்ந்தெடுக்க கீழ்காணும் பயனுள்ள ஆலோசனைகளை பின்பற்றலாம்.1) குறிப்பாக எவ்வித பணிகளுக்காக உங்களுக்கு இவர்களின் சேவை வேண்டும் என்றும், நாட்களுக்கா, வாரத்திற்கா, மாதத்திற்கா எப்போது தேவை என்றும் முதலில் தெளிவான முடிவெடித்துவிடுங்கள்.

2) நீங்கள் அணுகும் ஏஜென்சியை பற்றி தேவையான எல்லா தகவல்களையும் சேகரித்து அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு உங்கள் அருகாமையில் விசாரித்தோ, அல்லது "யெல்லோ பேஜஸ்" மற்றும் இணையத்தளங்கள் உதவியுடனோ தகவல் அறிய முயற்சி செய்யலாம்.

3) ஏஜென்ஸிகள் பரிந்துரைக்கும் நபர் எந்த வித குற்றப்பிண்ணனியும் இல்லாதவரா ? அதற்குள்ள விசாரிப்புகளுக்கு உட்பட்டவரா என அறிந்துகொள்ளுங்கள்.

4) பணிப்பெண்கள் பணி முடிந்து சென்றபின், உங்கள் கவனத்திற்கு வரும் பொருள் சேதமோ அல்லது களவோ ஏற்படாமல் தடுக்க, பணியில் அமர்த்திய நிறுவனத்திடமிருந்து நன்நடத்தை உத்திரவாத பத்திரம் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதன் நகல்களையும் உங்கள் வசம் வைத்திருப்பது நல்லது.

5) இன்றைய ஏஜென்சிகள் அனைத்தும் வீட்டுவேலைகளுக்கு பயன்படும் எல்லா நவீன உபகரணங்களும் வைத்திருக்கின்றன. ஒப்பந்தம் முடிவு செய்யும் முன்பு இது போன்ற சேவைகள் பற்றி தெளிவு பெற்று கொள்வது நல்லது.6) ஏஜென்சிகளின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை பற்றிய தெளிவான கொள்கையை பேசி முடிவு செய்வது நல்லது. பின்னர் திடீரென கூறப்படும் செலவுகளால் எற்படும் அதிர்ச்சியை இது நீக்கும்.

7) பணிப்பெண்களின் உத்திரவாத பத்திரம் நன் நடத்தை பத்திரம், உங்களுக்கு அவர்களால் ஏற்படும் எந்த வித நஷ்டத்திலிருந்தும் காக்கும். அவர்களுக்கு ஏற்படும் சேதத்திலிருந்தும் மீட்க இது உதவும்.

8) பணி நபர்கள் ஏஜென்சியை சேர்ந்தவர்கள்தானா, அல்லது ஏஜென்சி நியமித்த ஏதேனும் துணை நிறுவனத்தை சார்ந்தவரா என்று சோதித்துகொள்வது அவசியம், ஏனன்றால் பெரும்பாலும் துணை நிறுவனங்கள் போதுமான பயிற்சிகளை மேற்கொள்ளாது.

9) ஏஜென்சி எத்தனை வருடங்களாக இந்த பணியில் உள்ளன என்றும், அவர்கள் பெயரில் ஏதேனும் நுகர்வோர் குற்றசாட்டுகள் உள்ளனவா என்றும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அத்தகைய குறைகளை ஏஜென்சி எவ்வாறு சரி செய்தார்கள் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.

10) கூட்டுகுடியிருப்புகளில் வீட்டு பராமரிப்புக்காக நபர்கள் பணியில் அமர்த்தபடுகிறார்கள் அல்லது நாம் சொந்தமாக தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக அமர்த்தும் பொழுது, பணியாளர்களின் பிண்ணனி மற்றும் நடத்தையை அவர்கள் முந்தய முதலாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

11) பணிக்காக பணிப்பெண்கள் அடிக்கடி வீட்டுக்கு வரவேண்டியுள்ளதால், அவர்கள் எந்த வித தொற்று நோய் அல்லது இன்னல்களுக்கு உள்ளானவர்களாக இல்லாமல் இருப்பது நன்று.
0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More