Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.

Wednesday, October 5, 2011

ஃப்ரென்சு "மேனிக்யூர்" எவ்வாறு செய்து கொள்வது ?




ஃப்ரென்சு "மேனிக்யூர்
எவ்வாறு செய்து கொள்வது ?

ஃப்ரென்சு முறையில் கை மற்றும் நகத்தை எப்படி பராமரிப்பது ?

படி #1
உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் :

அடித்தள பூச்சு () முகப்பு பூச்சு
நிறத்திற்கான "வார்னிஷ்"
ஒரு மேல் பூச்சு
வெள்ளை () க்ரீம் "வார்னிஷ்"
நகத்தில் பயன்படும் "வார்னிஷ்" நீக்கி
ஏதேனும் நக கணு () சமையல் எண்ணை
நக கணுவில் பயன்படும் சிறிய குச்சி
ஒரு "எமெரி" அட்டை
சிறிது பஞ்சு
சிறிய அளவு கை மற்றும் நக "மாய்ஸ்ச்சரைசர்"



படி # 2
நேரம் ஒதுக்கி "மேனிக்யூர்" செய்துகொள்ளுங்கள்.

அவசரத்தில் செய்துகொள்ளும் போது, நிலைமை முற்றிலும் விரும்பத்தகாததாக அமையும். போதுமான நேரம் ஒதுக்கி செய்தால், விளைவும் நன்றாக இருக்கும்,  இறுதி வரை நீடிக்கவும் செய்யும்.





படி # 3
நக "வார்னிஷ்" நீக்கி

ஒரு பஞ்சு துண்டால் உங்கள் நகத்தில் உள்ள பழைய நக "வார்னிஷை" ஏதேனும் ஒரு "வார்னிஷ்" நீக்கியால் துடைத்து எடுக்கவும்.


படி # 4
நகக்கணு  எண்ணெய்

நகத்தின் விளிம்பில் சிறிது நகக்கணு எண்ணெய் விட்டு நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்.

பின்பு சற்று நேரம் எண்ணெய்யை ஊற விட்டால் , உங்கள் நகம் மிருதுவாகி விடும்.

நகக்கணு கிட்டாத பட்சத்தில், ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

படி # 5
நக வடிவம் நன்றாவதற்கு

வார்னிஷ் செய்தாலும் நகத்தின் வடிவம் கோணல் மாணலாக இருந்தால் பயனில்லை, ஆகையால் "எமெரி" பட்டையை கொண்டு நீங்கள் விரும்பும் வடிவம் பெறும் வரை நகத்தை சீராக்குங்கள்நினைவிருக்கட்டும், "எமெரி" பட்டையை மாற்று திசையில் தேய்க்காமல் ஒரே திசையில் தேய்க்க வேண்டும்.





படி # 6
நகக்கணுக்களை பராமரித்தல்

நகத்தின் நுணியில் நம் சருமம் சேரும் பகுதியை தான் நகக்கணு என்கிறோம்.

நகக்கணு நகத்தின் பகுதியே ஆனாலும், அது எண்ணெய் பசையுடன் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் "வார்னிஷ்" நகத்தில் அதிக நேரம் நீடிக்காது.

ஆகையால் நகக்கணுவை மென்மையாக வைத்து கொள்ள, 10 - 15 நிமிடங்கள் அதை வெதுவெதுப்பான வெந்நீரில் ஊற வைக்கவும். இதற்கு சிறந்த மாற்று வழி நகக்கணு நீக்கி பயன்படுத்துவது தான். பின்பு உங்கள் கையில் சிறிது "மாய்ஸ்ச்சரைசர்" பயன்படுத்தி, ஒரு 15 நிமிடங்கள் பற்றியிருக்கும் படி படலத்தை வைத்து நகத்தை போர்த்தி விடவும்.

இவ்வாறு செய்வதால், நகக்கணு மிருதுவாகும் மற்றும் ஈரப்பதம் கிடைக்கும்.

கெட்டு போன நகக்கணுக்களை நீக்க "க்யூட்டிகிள்" குச்சியை சிறிய வட்டமாக தேய்த்தால், பழைய நகக்கணுக்கள் நீங்கும்.

இதன் பின்பு, நகக்கணுக்கள் சுத்தமாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.




படி # 7
கை கழுவுதல்

நகத்தில் அழுக்கு மற்றும் தூசி எதுவும் படிந்து விடாதபடி, நன்கு கழுவி விடவும்.

பின்பு சிறிது வார்னிஷ் நீக்கியை கொண்டுமீண்டும் நகத்தை சுத்தப்படுத்தவும், இவ்வாறு செய்வதால் எண்ணெய் பதம் நீங்கும்.

படி # 8
நகத்தில் அடிப்படை பூச்சு

பாட்டிலில் விளிம்பில் உள்ள உபரியை நன்கு துடைத்தி எடுத்து விடவும்.

ஜாக்கிரதையாக 2-3 பூச்சுகளை இடவும்.

இவ்வாறு செய்வதால், பழைய வண்ண வார்னிஷ் துகள்கள் நீங்கி,உங்கள் நகத்தை பாதுகாக்கிறது.

படி # 9
நகத்தின் நுணியிற்கான பூச்சு

நுணி நகத்தில் பிங்க், அல்லது வெள்ளை நிற பூச்சுகளை பயன்படுத்தலாம்.

ஆயினும் க்ரீம் நிற பூச்சு வெள்ளையை விட இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது.

நக முனையை சுற்றி வார்னிஷால் கோடு வரைந்து கொள்ளவும்.

முதலில் வரைந்த கோடு நேர் வடிவமாக அமையவில்லை என்றால், அதை சற்று காய வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை நேரான கோடு வரைந்து கொள்ளவும்.

நக வார்னிஷின் அடுத்த பூச்சிற்கு முன், ஏற்கெனவே பூசியது நன்கு காய வேண்டும் என்பது அவசியம்.

கடைகளில் கிடைக்கும் சில வார்னிஷ் பாக்கில், நக நுணியில் பூசிடும் வண்ணம் அமைந்த "ஸ்டிக்கர்" களும் இருக்கும்.

அந்த "ஸ்டிக்கர்களை" பயன்படுத்தினால், நக நுணியின் மீது நேரான கோடு அமைக்க மிகவும் ஏதுவாக இருக்கும்.

நுணி பூச்சு இன்னமும் சரியாக அமைய, கார்ட்போர்ட் அட்டையை டைமண்டு வடிவில் வெட்டி நகத்தில் அதை வைத்து பூசினால், பூச்சு நகத்தை தாண்டி சருமம் மீது படாமல் தடுக்கலாம்.

படி # 10
வண்ணப்பூச்சு

அடுத்து வண்ண நிற வார்னிஷ் பயன்படுத்தவும்.

ப்ருஷ்ஷில் அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.

நிறத்தின் அழுத்தம் கூட்ட வேண்டுமென்றால் 2 அல்லது 3 பூச்சுகள் பூசலாம்.

ஆனால் முதல் பூச்சு நன்கு காய்ந்த பிறகு, இரண்டாம் பூச்சை பூசவும்.

ஃப்ரென்சு மேனிக்யூர் முறையில் பிங்க் மற்றும் வெள்ளை நிறம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது.

படி # 11
நகத்தில் மேல் பூச்சு

மேல் பூச்சு உறுதியானதாகும், மேலும் இது அடிப்படை பூச்சை முழுமையாக காத்து,  நிறத்தையும் பேணுகிறது.

படி # 12
நன்கு காயவிடவும்.

ஃப்ரெஞ்சு மேனிக்யூர் நல்ல பலன் அளிக்க வேண்டும் என்றால், பூச்சு காய்ந்ததா என்று பார்பதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பூச்சு காய்ந்துவிட்டதா என அறிந்து கொள்ள, நகத்தின் மீது உங்கள் நாக்கால் லேசாக தடவி பார்க்கவும், வார்னிஷின் சுவை உணர முடிந்தால் இன்னும் அது காயவில்லை என்று பொருள்.

இன்னமும் காயவில்லை என்று தோன்றினால், சிறிது நகக்கணு எண்ணெய் விடவும், இவ்வாறு செய்தால், நீங்கள் அணிந்திருக்கும் உடை மீது பூச்சு ஒட்டாமல் இருக்கும்.

படி # 13
சுத்தப்படுத்துதல்

நகத்தின் வார்னிஷ் அல்லது பூச்சு ஒன்றுக்கொன்று கலந்து விட்டால், ஏற்கெனவே பூசியதை முற்றிலும் நீக்கி சுத்தம் செய்து, மீண்டும் பூச வேண்டும்.

ஆயினும், நகத்தை சுற்றியுள்ள சருமத்தில் பூச்சு ப்டிந்துவிட்டால், சிறிது வார்னிஷை னகத்தை சுற்றிலும் பயன்படுத்தவும்.பின்பு நகக்கணு குச்சியுடன் சிறிது பஞ்சு எடுத்துக்கொண்டுதுடைத்து எடுக்கவும்.

படி # 14
வார்னிஷ் பாட்டிலை பத்திரப்படுத்துதல்

பேப்பர் டிஷ்யுவில் கொஞ்சம் வார்னிஷ் நீக்கியை விட்டுக்கொண்டு, பாட்டிலின் முனையை சுத்தப்படுத்தவும்.

இவ்வாறு செய்தால், அடுத்த முறை பாட்டில் மூடி அழுத்தி மூடிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.




Saturday, October 1, 2011

நன்றியுடன் 100வது பதிவு !


Thursday, September 29, 2011

ஒன்பது இரவுகள் - ஒப்பிலா தகவல்கள்



ஒன்பது இரவுகள்ஒப்பிலா தகவல்கள்

நவராத்திரி என்றால் என்ன ?

விஞ்ஞான தத்துவங்கள் கோலோச்சும் தற்காலத்திற்கு வெகு முன்னமே இந்திய பண்டிகைகள் நிலைநிறுத்திய மெய்ஞ்ஞானம் அற்புதாமானவை.
அப்படிப்பட்ட ஒரு பண்டிகையான நவராத்திரியை பற்றி தெரிந்து கொள்வோமா தோழர்களே !

சக்தி என்பது அழிவில்லாத ஒன்றாகும், அதை உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது, எப்போதும் அது நிலைத்து இருக்கும் என்ற விஞ்ஞான தத்துவம் நவராத்திரி எனப்படும் சக்தி வழிபாடு மூலம் நிலைநிறுத்தப்படுவதே இப்பண்டிகையின் பின்புலமாகும். "துர்க்கை" என்றால் தீய சக்தியிலிருந்து நம்மை காப்பவள் என்று பொருள். நம்மில் ஒளிந்திருக்கும் நற்சக்தியை தூண்டி எழுப்பும் முயற்சி தான் நவராத்திரி தத்துவம்.



ஏன் சக்தி வழிபாடு ?

கடவுளை இறைவன் என்று ஆண்பால் கொண்டு அழைக்கும்போது, ஏன் அம்மனை கொண்டாடுகிறோம் என நாம் ஐயம் கொள்ளலாம். காத்தல், பேணுதல்,  நல்வழி படுத்துதல் என இறைவனின் பல செயல்கள் தாய்மையை தான் சித்தரிக்கின்றன. குழந்தை தன் தாயில் இந்த குணங்களை காண்பதால் இறைவனின் இந்த தாயம்சத்தை போற்றவே நவராத்திரி விழா சக்தி வழிபாடாக விளங்குகிறது.



ஏன் வருடத்திற்கு இரண்டு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது ?

இந்திய நாட்டை பொருத்தவரை கோடையின் தொடக்கமும், குளிர்வாடையின் தொடக்கமும் சீதோஷணம் மற்றும் சூரியனின் ஆதிக்க சக்தியையும் நிர்ணயிக்கிறது. ஆகையால் இந்த இரு காலத்திலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மேலும் வேறு இரண்டு விளக்கமும் உண்டு

) பருவ மாற்றத்தின் போது நம் பூமி சூரியனின் மூலம் அதற்குண்டான ஒளியும் வெப்பமும் பெறுகிறது, இதை நன்றியோடு நினைக்கும் வண்ணம்.

இந்த பருவ மாற்றத்தால், நம் உடலில் மற்றும் மனதில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை சரி விகிதமாக காக்க வேண்டியும் அம்பாளை வணங்குகிறோம்.



ஒன்பது இரவுகள் என்ன கணக்கு ?

மூன்று பிரிவாக நவராத்திரி விழா பிரிக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் நல்வாழ்வின் தேவைகளான கல்வி, செல்வம்,வீரம் ஆகியவற்றில் துன்பத்தை எதிர்கொள்ளும் சக்தியை வேண்டி துர்க்கை அம்மனை வணங்கும் நாட்களாகும்.

அடுத்த மூன்று தினங்கள் நம் தேவைகள் அனைத்திற்கும் உதவும் செல்வம் வழங்கும் திருமகள் ஆகிய லக்ஷ்மி தேவியை வணங்கி அவள் ஆசி பெறும் நாட்களாகும்.

கடைசி மூன்று நாட்கள் நாம் பெற்ற வீரம் மற்றும் செல்வத்தை நல்முறையில் செலுத்த உதவும் கல்வியை அருளும் கலைமகள் எனும் சரஸ்வதியை போற்றி கொண்டாடும் தினங்களாகும்.

ஆக வாழ்வியல் தத்துவங்களை நம் பெரியோர்கள் நவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள் என்பது ஐயம் இல்லாத ஒன்றாகும்.



நாம் அறிந்திராத சில நவராத்திரி தகவல்கள் ;

1)  ஷரத் நவராத்திரி, வசந்த் நவராத்திரி மற்றும் ஆஷாட் நவராத்திரி என நவராத்திரி மூன்றாக பிரிக்கப்படுகிறது.

2)  செப்டம்பர் - அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி முதன்மையானதாகும்.

3)  துர்க்கையால் வதம் செய்யப்பட்ட மஹிஷாசுரன் வதத்தை ஒட்டி ஷரத் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.



4)  மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வரும் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் அதை வசந்த் நவராத்திரி அன்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாவாகும்.

5)  ஹிமாச்சல் பிரதேசத்தில் "ஆஷாட்"என்று அழைக்கப்படும் மழை பருவத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட் னவராத்திரி ஆகும். ஜூலை - ஆகஸ்ட் மாதம் இந்த கொண்டாட்டம் பின்பற்றப்படுகிறது.

6)  சக்தியின் ஒன்பது வடிவமானது துர்கா, பத்ரகாளி, ஜகதம்பா,   அன்னபூர்ணா, சர்வமங்களா, பைரவி, சண்டிகா, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என்று போற்றப்படுகிறது.







7)  நவராத்திரி விழாவின் தேதிகள் நிலவு பஞ்ஞாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுகின்றதுஅஷ்வின் மாதத்தில் பிறை தோன்றும் முதல் நாளான "பிரதிபாத" நாளில் இவ்விழா தொடங்குகிறது.

8)  ஒன்பது  நாளின் முடிவில் வரும் பத்தாம் நாளை "விஜயதசமி" அல்லது "தஷரா" என்று கொண்டாடி நவராத்திரி விழா செவ்வனே நிறைவு பெறுகிறது.





Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More